|
இலங்கையின் ஜனாதிபதி செயலகத்துக்கு உரிய நடைமுறைகள் இன்றி அதிகளவான பணியாளர்கள் பணிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவினரின் விசாரணை அறிக்கைகள் இன்றியும் கூட பலர் சேவைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவர், நேரடியாகவே எவ்வித பாதுகாப்பு விளக்கமின்றி ஜனாதிபதி செயலகத்துக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஒரு மாதக்காலமே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், செயலகத்தில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களை எவ்வித பரீட்சிப்புக்கள் இன்றி நிரந்தரமாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
Sunday, 25 October 2015
![]() |
ஜனாதிபதி செயலத்துக்கு உரிய நடைமுறைகளின்றி பணியாளர்கள் சேர்ப்பு |
Loading...
