இஸ்ரேலுக்கும் மேற்குக்கரையின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கும் இடையே உள்ள சோதனைச்சாவடி ஒன்றில், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள் மீது, பாலத்தீனியர் ஒருவர் கத்தியால் தாக்க முற்பட்ட வேளை, அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.
அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இதேமாதிரியான தாக்குதல் மரணங்களில் ஜெனின் நகருக்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவம் தற்போது புதிதாக நடந்துள்ளது.
அண்மைய வாரங்களில் பாலத்தீனியர்களின் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 11 பேர் பலியாகியுள்ளதுடன், 60 க்கும் அதிகமான பாலத்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
