ஜனாதிபதி ஆணைக்குழுவில் 9 பொலிஸார் புதிதாக நியமனம்
பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் புதிதாக 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உள்வாங்கப்பட்ட 9 பொலிஸ் உத்தியோகத்தர்களும் இம்மாதம் 16 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமனங்களைப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடமையாற்றிய 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் அவர்கள் சேவை செய்த இடத்திற்கே மீண்டும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
