Saturday, 28 November 2015

பிரதமருக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை வேண்டும்

பிரதமருக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை வேண்டும்
பிரதமருக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை வேண்டும்
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகவே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

 நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினாலேயே தயாரிக்கப்பட்டதாகவும், எனவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமாயின், அது பிரதமருக்கு எதிராகவே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் எனவும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்தனாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 2016 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுதிட்டத்துக்கு எதிராகவே தமது கட்சி வாக்களிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Loading...