Sunday, 8 November 2015

வடக்கு முதல்வரின் பதவிக்கு ஆபத்து ஏற்படுமா?










வடமாகாண முதலமைச்சரினை எவ்வாறேனும் பதவியிறக்க வேண்டுமென்ற சுமந்திரனின் தொடர் முயற்சியின் அடுத்த கட்டமாக முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ளனர். திட்டமிட்டு வடமாகாணசபையினில் உள்வீட்டுக்குழப்பங்கள் இருப்பதாக சுமந்திரன் ஆதரவு தரப்பு காண்பித்துவருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே நேற்று கைதடியிலுள்ள பேரவையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேரும் ஒன்று கூடி ஆராய்ந்திருந்தமையாகும்.

இதன் அடுத்த கட்டமாக மாகாணசபையினில் ஒற்றுமையினை தோற்றுவிப்பதென்ற பேரில் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் கட்சி தலைவர் இரா.சம்பந்தனால் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு முதலமைச்சரிற்கு மௌனமாக இருப்பதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக வடமாகாண முதலமைச்சரினை பலவீனப்படுத்தும் ஒருகட்டமாகவே அமைச்சர்களினை மாற்றவும் அதற்கு பதிலாக சுமந்திரன் ஆதரவாளர்களை நியமிக்கவும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இவற்றினை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணி அவைத்தலைவர் சிவஞானத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Loading...