Sunday, 15 November 2015

ஆட்சிமாற்றம் சுமுகமாக அமையும்': மியன்மார் அதிபர்

Image captionதெயின் செய்ன் தலைமையிலான பகுதியளவு- சிவில் அரசாங்கம் 2011-இல் பொறுப்பேற்றது
மியன்மாரில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூ சியின் கட்சிக்கு ஆட்சியதிகாரத்தை கையளிக்கும் நடைமுறை சுமுகமாக அமையும் என்று அந்நாட்டு அதிபர் தெயின் செய்ன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
யங்கூன் நகரில் நடைபெற்ற அரசியல்கட்சிகளின் கூட்டம் ஒன்றிலேயே தெயின் செய்ன் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில், போட்டி நடந்த தொகுதிகளில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி 80 வீதத்துக்கும் அதிகமான இடங்களை வென்றுள்ளது.
புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுக்கள் அடுத்த வாரம் அளவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மியன்மாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் நீடிக்கும் இராணுவ-பின்புலம் கொண்ட அரசாங்கம் முடிவுக்கு வரும்.
Loading...