தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்தநாள்! வாழ்த்தி வடக்கில் சுவரொட்டிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்று 61ஆவது பிறந்தநாள். இந்நிலையில், அவரை வாழ்த்தி வடக்கின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிரித்த முகத்துடன் பிரபாகரனின் உருவப்படம் காணப்படும் இந்தச் சுவரொட்டிகளில், 'தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்க!', தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தலைவர் வாழ்க!!' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி புலம்பெயர் தேசங்களில் இன்று பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.