லெபனானில் இதுவரை இல்லாத அளவுக்கு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டச் சம்பவத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களில் சவுதி அரேபிய இளவரசர் ஒருவரும் அடங்குவார் என செய்திகள் கூறுகின்றன.
எனினும் அந்த இளவரசர் யார் என்பதை தகவலை வெளியிட்ட லெபனானிய செய்தி நிறுவனம் கூறவில்லை.
ஆனாலும் மேலும் நான்கு பேருடன் ஒரு வரம் முன்பாக பெய்ரூட் விமான நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டர் என்று அந்தச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
தனி விமானம் ஒன்றில் சுமார் இரண்டு டண்கள் அளவுக்கு கொக்கெயின் மற்றும் ஆம்ஃபெதடமைன் போதைப் பொருட்கள் அடங்கிய குப்பிகள் ஏற்றுவதற்கு தயாராக இருந்தன என அந்த லெபனானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட் விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்ற போதைப் பொருட்களில் இதுவே அளவில் மிகப் பெரியது என்று கூறப்படுகிறது.
