இந்த வரவு செலவுத்திட்டம் வறிய வரவு செலவுத்திட்டமாகும்: டி.யூ குணசேகர
நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள வரவு செலவுதிட்டமானது 1948ஆம் ஆண்டுக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட வறிய வரவு செலவுத்திட்டம் என முன்னாள் அமைச்சர் டியூ.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் வறிய மக்களை விட அதிக வருமானம் பெறுபவர்கள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஜே.ஆரிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது நூற்றுக்கு 24ஆக இருந்த நாட்டின் வருமானம், கடந்த ஆட்சியில் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. இதனால் மத்தியதர வர்க்கத்தை விட வறிய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது முற்றிலும் ஐ.தே.கவின் வரவு செலவுத்திட்டமாகும். ஜனாதிபதிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவே இது முன்வைக்கப்பட்டுள்ளதா என சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
