Wednesday, 4 November 2015

HNDA மாணவர்கள் பிரச்சினை :இறுதி முடிவு அமைச்சரவையின் கையில்

HNDA மாணவர்கள் பிரச்சினை :இறுதி முடிவு அமைச்சரவையின் கையில்
HNDA மாணவர்கள் பிரச்சினை :இறுதி முடிவு அமைச்சரவையின் கையில்
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாவுக்கு பட்டப்படிப்புக்கு சமமான அந்தஸ்து வழங்குவது தொடர்பில் இறுதி முடிவு அமைச்சரவையினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரவித்துள்ளது. 

இது குறித்த 46/90 சுற்றரிக்கையை மீண்டும் அமுலாக்க அமைச்சரவை அனுமதி அவசியம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜீ.எஸ்.எம்.குணரத்ன குறிப்பிட்டுள்ளார். 

இன்று இது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. 

இதனையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே ஜீ.எஸ்.எம்.குணரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...