அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பட்டப்படிப்பு அறிமுகம்
அடுத்த வருடம் முதல் பல்கலைக் கழகங்களில் தொழில்நுட்ப பட்டப்படினை அறிமுகப்படுத்த உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக் கழகங்களில் இந்த பாடநெறியை அறிமுகப்படுத்தும் முதல் சந்தர்பம் இது என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி மொஹான் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார் .
கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் தொழில்நுட்ப பாடநெறியை கற்கும் மாணவர்களுக்காக இந்த பட்டப்படிப்பினை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் களனி, றுகுணு மற்றும் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழங்களில் இந்த பாட நெறி கற்பிக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது கட்டத்திற்காக 1800 மாணவர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
