Wednesday, 30 December 2015

புதிய முறைமையின் கீழ் ஜூன் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: ராஜித சேனாரத்ன











உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்துத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்ததாவது;

முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்புப் பேரவையாகப் பெயரிடும் யோசனை ஜனவரி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அவ்வாறு கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பு, ஜனாதிபதி முறைமை அற்ற பிரதமர் தலைமையில் நாட்டின் ஆட்சி இடம்பெறும். ஜனநாயக முறைமையைக் கொண்டு வருவதே புதிய அரசியலமைப்பு முறைமையாகும். அத்துடன், 20 ஆவது திருத்தம் ஊடாக தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொகுதிவாரி மற்றும் கலப்பு முறையின் கீழ் அதாவது விருப்பு வாக்கு முறையின்றி நடத்தவுள்ளோம். நல்லாட்சியின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் வழங்குவதில்லையெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.


Loading...