தேவையானவை
நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி – அரை கிலோ
பூண்டு – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 50 கிராம்
வெல்லம் – 2 ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் – 10
கடுகு, வெந்தயம் – 2 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வரமிளகாயை வறுத்து, வெந்தயம், கடுகு என ஒவ்வொன்றாக போட்டு வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். மீதியுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, பூண்டுகளைத் தோல் உரித்து முழுதாக அப்படியே போட்டு வதக்கி, பாதி வதங்கியதும் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளியைச் சேர்க்கவும்.
தக்காளியில் உள்ள தண்ணீரிலேயே பூண்டு, தக்காளி இரண்டுமே வெந்து விடும். வேகும் போதே உப்பு சேர்க்கவும். வெல்லம், பெருங்காயம், வறுத்துப் பொடித்த பொடி எல்லாவற்றையும் வெந்தபின் சேர்த்து, நன்றாக வதக்கவும். எல்லாமும் சேர்ந்து வந்ததும் இறக்கி விடவும். ஆறியதும் பீங்கான் ஜாடிகளில் சேமித்து வைத்து பயன்படுத்தவும்.
