ஜனாதிபதி அம்பாறை விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 27 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
ஞாயிற்றுக் கிழமை அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா தேசியப் பாடசாலைக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அங்கு இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
அன்றைய தினம் அற நெறிப் பாடசாலை (தஹம் பாஸல) பௌத்த துறவி மாணவர்களுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களையும் வழங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
