முல்லை.காடழிப்பைச் சட்டத்திற்கு மாறாக செய்யவில்லை : முஸ்லிம் மக்கள் தெரிவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தாம் சட்டத்திற்கு மாறாக காடுகளை அழிக்கவில்லை என அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் முதலமைச்சரின் செயலாளரிடம் தெரிவித்துள்ளனர். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் அழைப்பின் பேரிலேயே தாங்கள் சொந்தக் காணிகளில் வளர்ந்த பற்றைகளை வெட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அவ்வாறானதொரு அழைப்பை நாங்கள் விடுக்கவில்லை என தெரிவித்திருக்கும் மாவட்டச் செயலர்.திருமதி.ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- குமாரபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக திட்டமிட்டவகையில் காடழிப்பு நடைபெற்று வருகின்றமை தொடர்பாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் வடமாகாண முதலமைச்சரின் செயலாளருடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் மற்றும் முஸ்லிம் மக்கள், தாங்கள் முன்னர் வாழ்ந்த நிலங்களில் வளர்ந்திருந்த பற்றைகளையே வெட்டியதாகவும், காடுகளை சட்டத்திற்கு மாறாக அழிக்கவில்லை எனவும் அந்தக் காணிகளுக்கான ஆவணங்களை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கான அழைப்பை கரைத்துறைப்பற்று பிரதேச செயலரே விடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
