சிரியாவில் ஐ எஸ் அமைப்பு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளின் கோட்டை எனக் கருதப்படும் ரக்கா நகர் மீது கடுமையான வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களுக்கு ரஷ்ய விமானங்களே பொறுப்பு என ரக்காவிலிருக்கும் செயல்பாட்டாளர்களின் வலையமைப்பு கூறுகிறது.
இத்தாக்குதலில் கணிசமான அளவுக்கு பெண்களும், சிறார்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சிரியன் அப்சர்வேட்டரி குரூப் எனும் மனித உரிமைகள் அமைப்போ, ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறுகிறது.
இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் கூட்டுப் படைகள் நடத்தியதாகவும் அந்த அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
