Wednesday, 2 December 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்--முரத்தட்வே ஆனந்த தேரர்











பயங்கரவாதம் நிலவிய காலத்தில் கால்களுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டு அஞ்சியிருந்தவர்கள் இன்று சிங்கங்களைப் போன்று சீறத் தொடங்கியுள்ளனர். அவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்ய ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் தேவைக்கு அமைய ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அரசாங்கம் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முட்டாள் தனமாக தீர்மானித்தால், வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப்படும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர்எச்சரிக்கை விடுத்துள்ளார்
Loading...