Sunday, 24 January 2016

அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி

அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பனிப் புயலில் ஒன்றாக கருதப்படும் குளிர்கால பனிப்புயல் தாக்கியதில் கிழக்கு கடற் கரையோரப் பிராந்தியத்தின் அன்றாட வாழ்க்கை ஸ்திம்பித்துள்ளது.
அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலிAFP
Image captionஅமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி
பயங்கரமான காற்று மற்றும் பனிப்பொழிவுடன் சம்பந்தப்பட்டதாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளன.
லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
சில இடங்களில் படிந்த ஒரு மீட்டர் உயரம் வரையிலான பனி காரணமாக ரயில்களும், பஸ்களும் மற்றும் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நியூயார்க்கில் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியகம் மற்றும் திரையரங்குகள் மூட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. சூதாட்ட மையங்களும் மூடப்பட்டன.
இப்போது இந்த பனிப்புயல் குறைந்து அத்திலாந்திக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற போதிலும் அதன் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Loading...