Saturday, 2 January 2016

சவுதி அரேபிய ஷரியா சட்டத்தை மீறிய 19 வயது பெண் கற்பழிப்பு


சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டு இருந்த போது ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவரது காரை மறித்து அவரை இழுத்து சென்று 7 பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் அதனை தொடர்ந்து அப்பெண்ணுக்கு 200 கசையடி வழங்கபட்டதாகவும், அதனால் இது ஒரு மிருகத்தனமான தண்டனை என சில இணையங்களும், சமூக வலைகளும் செய்தி வெளியிட்டு இஸ்லாமிய சட்டத்தை விமர்சித்து வருவதை அவதானிக் கூடியதாக உள்ளது.

உண்மையில் எதற்காக அவருக்கு தண்டனை என்பதை பல இணையங்கள் மறைத்து " கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 200 கசையடி" என்ற தொனியிலே தம் செய்தியை பிரசுரித்து இருந்தது.

இந்த வழக்கில் சந்தேக நபர்கள் 7 பேருக்கும் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கபட்ட அதேவேளை, சவுதி அரேபிய ஷரியா சட்டத்தின் படி பொது இடங்களுக்கு செல்லும் போது பெண்களுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆண் துணையாக இருக்க வேண்டும். மர்ஹம் இல்லாத இரத்த உறவு இல்லாத நபர்களுடன் முறையற்ற பயணம் செய்வது, தனிமையில் இருப்பது தடை செய்யபட்ட ஒன்றாகும்.

இந்த சட்டத்தை மீறியதற்காகவே ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு 90 சவுக்கடி தண்டனை வழங்கபட்டது.

சவுதியின் நீதித்துறை விடுத்துள்ள அறிக்கையில் உணர்ச்சி படுவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை நிதி அமைச்சகம் வரவேற்கிறது என கூறியும் இருந்தது.

இருந்தும், தண்டனை குறித்து பாதிக்கபட்ட பெண்ணின் வழக்கறிஞர் அப்துல் அல் லஹீம் சவுதி அரேபிய நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

பாதிக்கபட்ட பெண் தேவையற்ற விதத்தில் ஊடகங்களில் பேசியதை தொடர்ந்து நீதிமன்றம் 90 சவுக்கடி தண்டனையை 200 ஆக உயர்த்தியது. மேலும் நீதிமன்றம் வழக்கறிஞரின் உரிமத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
Loading...