அரசியலில் ஏமாற்றப்படும் போது அவமானப்படும் போது மனது வக்கிரத்தோடு பழிவாங்க அலைகிறது.வரும் விளைவை சிந்திக்காத மனித மிருகமாகி பாய்ந்தது பழி தீர்க்கிறது. பல வேளை பழி தீர்ப்புகள் குறி தவறிப் போய்விடலாம்.யாரையோ நோகடிப்பதாய் நினைத்து யாரையோ நோகடித்ததாய் முடியாலாம். காலம் எல்லாம் அதன் வலி நெஞ்சைப் பிசையலாம். அப்பாவிகளை நோகடிப்பதை விட அனியாயத்தை எதிர்க்காது விடலாம்.
பழிக்குப் பழி என்பதை வழியாக எடுக்காதவன் ஞானி. ஞானியாக இருக்க முடியாத அன்றாட மனிதர் நாம். என்றாலும் நாம் இனி பழிக்கு பழி என்பதை விட்டு ஞானியாக இருக்க முயன்றால் என்ன? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை… சீ வேண்டாம் அவன் கன்னத்தில் அறையாது இருந்தால் என்ன? அடேயப்பா அதற்கு எவ்வளவு பொறுமை வேண்டும் என்பது மலைப்பாகிறதா? முதலில் நல்ல மனிதன். பின்பு ஞானி. அத்தால் வாழ்வில் என்றும் அமைதி.
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

