Sunday, 17 January 2016

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினால் இலங்கைக்கு அதிகமாக உதவுவோம்












இலங்கை அரசாங்கத்தின் மாற்றங்களுக்கான முயற்சியை பிரித்தானியா வரவேற்பதாகவும் இலங்கையில் தயாரிக்கப்படும் புதிய அரசியல் அமைப்புக்கு தம்மால் எவ்வித செல்வாக்கும் செலுத்தப்படவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஹீகோ ஸ்வைர் இதனை தெரிவித்ததார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அவர் பிரித்தானியா எதிர்காலத்தில் இலங்கைக்கு பாரிய உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் பிரித்தானியா இலங்கைக்கான தமது உதவிகளை அதிகரிக்கும் என்றும் ஸ்வைர் உறுதியளித்தார்.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டில் தற்போது வலுவற்ற சட்டம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Loading...