|
லெபனான் எல்லையில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் மீது ஹிஸ்புல்லாஹ் அமைப்பு குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்படி ஷியா ஆயுதக் குழு குறிப்பிட்டுள்ளது. டோவ் மலைப்பகுயில் இரு இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை இலக்கு வைத்து இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை உறுதி செய்திருக்கும் இஸ்ரேல் படை, பதலளிக்கும் வகையில் பீரங்கி தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டது. இந்த பீரங்கி குண்டுகள் வஸ்ஸானி என்ற கிராமத்தில் விழுந்ததாக லெபனான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும் இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உறுதி செய்யப்படவில்லை.
|
Wednesday, 6 January 2016
![]() |
இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் மீது ஹிஸ்புல்லாஹ் அமைப்பு குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது |
Loading...
