Wednesday, 20 January 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக புதிய அரசியல் கட்சியொன்று ஸ்தாபிக்கப்படும்!

quality of votes according to MR

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு முன்­பாக புதிய அர­சியல் கட்­சி­யொன்று ஸ்தாபிக்­கப்­படும் அதே­நேரம் இது தொடர்­பி­லான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு எதிர்­வரும் சில மாதங்­களில் அறி­விக்­கப்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரிவித்தார்.
இவ்­வா­றான நிலையில் புதிய அர­சியல் கட்சி உரு­வாக்­கப்­ப­டு­வ­தனை யாராலும் தடுத்து நிறுத்த முடி­யாது எனவும் நம்­பிக்கை வெளியிட்­டுள்ளார்.
பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­யலாளர் மாநாட்­டி­லேயே கட்­சியின் தலை­வரும் கொழும்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய விமல் வீர­வன்ச மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு முன்­பாக புதிய அர­சியல் கட்­சி­யொன்று ஸ்தாபிக்­கப்­ப­டு­வ­தற்­கான அனைத்து செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்­த­வ­கையில் இது குறித்த உத்­தி­யோ­கப்­பூர்வ அறி­விப்பு எதிர்­வரும் சில மாதங்­களில் விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.
எதிர்க்­கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்த அர­சாங்கம் இன­வாத மோதல் ஒன்றை உரு­வாக்க செயற்­பா­டு­களை மும்­மு­ரமாக மேற்­கொள்­கின்­றது. அர­சாங்­கத்தின் மீது நாளுக்கு நாள் மக்­களின் அதி­ருப்தி அதி­க­ரித்து வரும் போது, எதிர்க்­கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்த, ஒவ்­வொரு துருப்புச் சீட்­டுக்­களை எடுத்து அவற்றில் பலன் கிடைக்­காத நிலையில், கறுப்பு ஜூலை போன்ற இன­வாத மோதலை ஏற்­ப­டுத்த தயா­ராகி வரு­கி­றது.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் அன்று கறுப்பு ஜூலை கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்தி தமிழ், சிங்­கள மக்கள் இடையே பிளவை ஏற்­ப­டுத்­தி­யது. அதற்­கான பொறுப்பை எதிர்க்­கட்­சிகள் மீது சுமத்தி, அந்த கட்­சி­களை தடை­செய்­தது. இவ்­வா­றான அடக்­கு­முறை மூலம் அன்­றைய ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் தமக்கு எதி­ராக எழும் மக்கள் எதிர்ப்பை இரத்­தத்தின் மூலம் அடக்­கி­யது. இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளையே இன்றும் முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றது.
எவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தாலும் ஒன்­றிணைந்த எதிர்க்­கட்சி என்ற ரீதியில் பாரா­ளு­மன்­றத்­திற்கு உள்ளும் வெளியிலும் இந்த அர­சாங்­கத்­திற்கு அடக்கு முறை உள்ளிட்ட மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக போராடி வருவதோடு வெகுவிரைவில் அரசாங்கத்திற்கு சவால் விடும் அளவு புதிய கட்சியொன்றை உருவாக்குவோம் இதனை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
Loading...