Sunday, 17 January 2016

மக்களின் நிலங்களை அவர்களிடமே வழங்குங்கள்

மக்களின் நிலங்களை அவர்களிடமே வழங்குங்கள்
மக்களின் நிலங்களை அவர்களிடமே வழங்குங்கள்
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் படையினர் வசம் உள்ள பொதுமக்களின் நிலங்களை அவர்களிடமே வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முப்படையினருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிக்கான மீள்குடியேற்றம் தொடர்பில் பலாலியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் உள்ளிட்ட படையினருக்கு மிக அவசியமான நிலங்கள் தவிர்ந்த, ஏனைய நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு, பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், முப்படையினர் இணைந்து பேசுவதன் ஊடாக நிலங்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே பலாலி விமான நிலையம், காங்கேசன்துறைத் துறைமுகம், மற்றும் மயிலிட்டி துறைமுகம் ஆகியவற்றுக்கு எவ்வளவு நிலம் தேவை என்பதை அறிந்து, வடமாகாண முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் இராணுவத்தினர் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஆலயங்களை அடையாப்படுத்தி அவற்றில் தினசரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறும் பணித்த பிரதமர், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை தொடர்ந்தும் இயக்குவதா? இல்லையா? என்பதை யாழ்.மாவட்ட மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Loading...