Sunday, 31 January 2016

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர்:

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர்:



யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மாகாணத்திலிருந்து  வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்களவர்களும் முஸ்லிம்களும் சொந்தஇடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கும் மாகாண ஆளுனர் ஜீ.எஸ். பலிஹக்காரவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சில மாதங்களாக முதலமைச்சருக்கும் ஆளுனருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் வடக்கில் இடம்பெயர்ந்ததுடன், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிங்கள முஸ்லிம்களும் இடம்பெயர்ந்திருந்தனர்.

மீள்குடியேற்றம் குறித்த யோசனையை ஜனாதிபதி அங்கீகரித்ததன் பின்னர் வடக்கின் ஐந்து மாவட்டச்செயலாளர்களின் ஊடாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.


Loading...