Monday, 11 January 2016

ஞானசார தேரர் அரசியலில் இருந்து விலகல்














பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அரசியலில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பல சேனா அமைப்பினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டதாகவும், எனினும் தற்போது பொதுபல சேனா அமைப்பினை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் பிக்குகள் எனவும், தங்களுக்கு அரசியல் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் பொது பல சேனா அமைப்பு, பொது ஜன பெரமுன என்ற பெயரில் போட்டியிட்டதாகவும், எதிர்காலத்தில் அரசியலில் இருந்து விலகுவதற்கு பொதுபல சேனா அமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பொது பல சேனாவின் கருத்துகள் பொது ஜன பெரமுன ஊடாக முன்னெடுக்கப் படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொது ஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் பிக்குகள் கட்சி பக்கச்சார்பாக செயற்படுவதாக எண்ணுவதாக அக்கட்சியின் செயலாள் டொக்டர் நாத் அமரகூன் தெரிவித்துள்ளார்.
Loading...