உயர் தரம் சித்தியடையாதோர் மனம் தளர வேண்டாம் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறியதுடன் அவர்களுக்கான மாற்று வழிகளையும் கூறியுள்ளார் .
பரீட்சையில் மாணவர்கள் சித்தி அடைவதும் சித்தி பெறாமையும் சகஜம் . சித்தி அடையவில்லை என்பதால் நீங்கள் திறமை சாலிகள் இல்லை என்று எண்ணுவது மடமை.
தற்போது இலங்கையில் பரவலாக சிறந்த முறையில் கற்பிக்கப் படும் CIMA, ,ACCA, ACA, CIM போன்ற துறைகளில் ஒன்றினைத் தெரிவு செய்யுங்கள் , பல்கலைக் கழகம்களுக்கு தெரிவு செய்யப் பட்ட மருத்துவர், பொறியியலாளர் ,பட்டதாரி போன்ற துறைகளை விட பன்மடங்கு சம்பளம் பெறக் கூடிய தொழில் வாய்ப்பினை அரசதுறை , தனியார் துறை , மற்றும் வெளிநாடுகளில் பெற முடியும்.
இதற்கு ஓரளவு மேலதிகமான செலவு மட்டுமே தேவைப்படும் , இதை உங்களால் சமாளிக்க முடியுமானால் நிச்சயம் நீங்கள் இரண்டு அல்லது மூன்று வருடம்களில் பரீட்சைகளில் சித்தி அடைந்து தகுதி வாய்ந்த துறைகளில் மிக இலகுவாகத் தொழில் வாய்ப்புகளைப் பெறமுடியும்.
பல்கலைக் கழகம் செல்வதுக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் அதன் பின்னர் நான்கு அல்லது ஐந்து வருடம்கள் செல்லும் படிப்பை முடிப்பதுக்கு. அது மட்டும் அல்ல தொழில் வாய்ப்புப் பெற மேலும் இரண்டு அல்லது மூன்று வருடம்கள் காத்திருக்க வேண்டும் .
இக் கல்விக்கு ஆங்கில அறிவு முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்
பல்கலைக் கழகம்களில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளை விட உங்களது ஆங்கில அறிவும் விருத்தி அடைந்து இருக்கும் ,
எனவே கவலையை விட்டு விட்டு மனம் தளராது கொஞ்சம் முயற்சி எடுத்தால் நீங்கள் வாழ்வில் ஒரு சிறந்த அந்தஸ்த்தைப் பெற முடியும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்

