|
அரசியலமைப்பின் பிரகாரமே தமக்கு கடமையாற்ற முடியும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநராக ரெஜினோல் குரே நியமிக்கப் பட்டுள்ளமையை அடுத்து அவரை வரவேற்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதிகார பகிர்விற்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்ததொரு காரணியாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்குள்ள தடைகளை நீக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் பிரபா கணேஷன் மற்றும் தலைவர் குமரகுருபரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு – பம்பலபிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நேற்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது வட புலத்தைச் சேர்ந்த கொழும்பு தமிழ் மக்களினால் வட மாகாண ஆளுநர் வரவேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
Sunday, 28 February 2016
![]() |
அதிகார பகிர்விற்கு 13 வேண்டும்! ரெஜினோல்ட் குரே |
Loading...
