Sunday, 7 February 2016

நாமல், பசில் விரைவில் கைது?

நாமல், பசில் விரைவில் கைது?
நாமல், பசில் விரைவில் கைது?
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச  ஆகியோர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் விரைவில் கைது செய்யப் படவுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

நாமல் ராஜபக்ச  மற்றும் பசில் ராஜபக்ச  ஆகியோர் இவ்வாறு  கைது செய்யப்படக் கூடிய  சாத்தியம் உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சிரேஸ்ட புதல்வர் நாமல் ராஜபக்ச மற்றும் சகோதரர் பசில் ராஜபக்ச  ஆகியோரும் கைதாகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச  ஆகியோரின் விமானப்பயணச் செலவுகள் 150 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,பொதுமக்கள் பணத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச  கைது செய்யப்படக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Loading...