இலங்கையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நியமனத்தை இரத்துசெய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர் கரு ஜயசூரிய, தேர்தல்கள் ஆணையாளர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடாத சரத் பொன்சேகா அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் அரசியல் சாசனத்திற்கு முரனானது என்று கூறியுள்ள மனுதாரர்கள், அந்த நியமனத்தை இரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்.
