Friday, 26 February 2016

இலங்கையின் வரி அறவீட்டு நடவடிக்கையை வெளி நபர்களிடம் ஒப்படைக்க தீர்மானம்













இலங்கையில் வரி அறவீட்டு நடவடிக்கைள் வெளி நபர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி அறவீட்டு நடவடிக்கைகள் வெளி நபர்களிடம் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் திணைக்களத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் குறித்து உள்நாட்டு இறை வரித் திணைக்கள அதிகாரிகள், நிதி அமைச்சின் அதிகாரிகள், வரி கணக்காய்வு செய்யும் நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. வரி நிலுவைகளை அறவீடு செய்யும் பொறுப்பினை வரி கணக்காய்வு செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் இந்த முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதற்கு எதிராக போராடப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...