எக்டா ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மேற் கொள்ளப் படவுள்ள எக்டா ஒப்பந்தந்தினால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என அரச வைத்திய அலுவலர் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து எக்டா திட்டத்தை கொண்டு வருகின்றனர். இது இலங்கை மருத்துவதுறைக்கு மாத்திரமன்றி தொழிநுட்பம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்..
வடமாகாணத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஜி.பி.எஸ் மூலம் இயங்கும் அவசர அம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அம்புலன்ஸ் வண்டி இல்லை என்றால் இந்தியாவிலிருந்து அதனை பெற்றுக் கொள்ளலாம் அல்லது கடனாக நிதியை பெற்று குறித்த சேவையினை ஆரம்பிக்க முடியும் எனவும் அரச வைத்திய அலுவலர் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
