இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று நாடு
இரண்டு வாரங்களுக்குள், இரண்டாவது முறையாக நாடு முழுவதிலும் மின்சாரம் தடைபட்டுள்ளதையடுத்து, இலங்கையின் மந்திரி ஒருவர் கூறும் போது, இலங்கை வரலாற்றில் நாடு முழுவதிலும் இப்படியானதொரு மின் தடை ஏற்பட்டதில்லை வழக்கத்திற்கு மாறான ஒரு சம்பவம். இதனால் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு அப்பால் நாசவேலைகள் எதுவும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனினும் தொழில்நுட்ப விசாரணைகளையடுத்தே இது தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று நாடுமுழுவதும் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை நீடித்தது. கடந்த 6 மாதங்களில் ஏற்படும் 3-வது மிகப்பெரிய மின்வெட்டு இது ஆகும். வடக்கு கொழும்பில் உள்ள முக்கிய மின் நிலையம் ஒன்றில் விபத்து ஏற்பட்டதையடுத்து இந்த மின் தடை ஏற்பட்டது. இந்த வெடிவிபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், நாசவேலை இருக்காது என்பதையும் மறுப்பதற்கில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில், பெரும்பாலான இடங்களில் நேற்றே மின் விநியோகம் சரி செய்யப்பட்ட நிலையிலும், இன்னும் சில இடங்களில் மின் விநியோகம் சீர் செய்யப்படவில்லை. நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. பல பெட்ரோல் நிலையங்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த 1996 -ஆம் ஆண்டு நான்கு நாட்களுக்கு மின்சாரம் இல்லாமல் முற்றிலும் முடங்கியது. இதற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மின் தடை நேற்று ஏற்பட்டதுதான். மின் தடை ஏற்பட்டதையடுத்து ராஜினாமா செய்வதாக, மின்சார சபையின் தலைவர் அனுவுரா விஜ்பாலா அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை.கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தான் இதே போன்று நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்ட நிலையில், மீண்டும் மின் தடை ஏற்பட்டுள்ளதால், சம்பவம் குறித்து விசாரணை செய்ய 5 பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
