Monday, 28 March 2016

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது!

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது!
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது!
இலங்கையில் முன்னைய அரசாங்க காலத்தைப் போன்று ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல், கடத்தல்கள், கொலைகள் போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காது என்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க உறுதி அளித்திருக்கின்றார். 

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, வெள்ளை வான்களில் கடத்தப்பட்டமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் இப்போது இடம்பெறுவதில்லை. 

ஊடக சுதந்திரத்தை நாங்கள் உறுதி செய்திருக்கின்றோம் என்றார் கயந்த கருணாதிலக்க. எதிர்காலத்திலும் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி செயற்பட்டத்தக்க வகையில் எமது ஆட்சி நிர்வாகம் நடக்கும். ஊடகவியலாளர்களின் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்க மாட்டாது என்றும் கூறினார் அமைச்சர் கருணாதிலக்க. 

ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருப்பதனால் பொதுமக்களுக்கு சரியான தகவல்களை கொண்டுசேர்க்கத் தக்க விதத்தில் ஊடக சுதந்திரத்தை உரிய முறையில் செயற்படுத்த ஊடகவியலாளர்கள் முன்வரவேண்டும் என்றார் அமைச்சர் கயந்த கருணாதிலக்க. யாழ். பொது நூலகத்திற்கும் அமைச்சர் கருணாதிலக்க நூல்கள் அன்பளிப்பு செய்தார்.

ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பலாலி ஆயுதப்படைகள் தலைமையகத்தில் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சந்திப்பொன்று நடைபெற்றது. மாவட்டம் தோறும் ஊடகவியலாளர்களுக்கு 25 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் யாழ்ப்பாணத்தில் ஊடவியலாளர்களுடனான சந்திப்பில் உறுதியளித்திருக்கின்றார். 

                                 
Loading...