|
டோங்கா தீவுகளுக்கு அருகாமையில் கடலுக்குள் திடீரென்று தோன்றிய நிலப்பரப்பினைக் கண்டு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த படகோட்டிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். டோங்கா தீவுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது vava’u தீவு. இந்த தீவின் அருகே சில படகோட்டிகள் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களது படகில் இருந்து தொலைவில் கடற்பரப்பில் மாற்றங்கள் நிகழ்வதை அவர்களால் காண முடிந்தது.
இதில் வியப்படைந்த அந்த படகோட்டிகள், அந்த பகுதிக்கு தங்கள் படகினை செலுத்தியுள்ளனர், ஆனால் திடீரென கடலுக்கடியில் இருந்து எரிமலை ஒன்று வெடித்துள்ளது. அந்த எரிமலையில் இருந்து வெளியான பாறைத்துகள்கள் அப்பகுதி முழுவதும் கடற்பரப்பின் மீது மிதக்கத்துவங்கியுள்ளது.
மேலும் அந்த பாறைத்துகள்கள் உறைந்து நீரால் சூழ்ந்த அந்த பகுதி திடீரென்று நிலப்பரப்பாக உருமாறத் துவங்கியுள்ளதை அந்த மாலுமிகள் பார்த்துள்ளனர். கடலுக்கடியில் இதுபோன்ற நிகழ்வுகள் ஆண்டுக்கு பலமுறை நடைபெறுவதுண்டு, ஆனால் அந்த நிகழ்வு இதுவரை எவரும் சென்றிராத பகுதிகளில் மட்டுமே நடைபெற்று வந்தது.
டோங்கா பகுதியில் உருவான நிலப்பரப்பு குறித்து கேள்வியுற்ற அறிவியல் ஆய்வாளர்கள் அந்த பகுதியை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவர்களால் அந்த நிகழ்வு நடந்து 6 மாதங்கள் கடந்த பின்னரே அப்பகுதிக்கு செல்ல முடிந்துள்ளது, இதனால் அந்த நிலப்பரப்பின் பெரும்பகுதி கடலடிப்பட்டு கலைந்திருந்தது.
நிலப்பரப்பு புதிதாய் உருவாகி 8 மாதங்கள் கடந்து 2000 மைல்கள் தொலைவில் இருக்கும் அவுஸ்திரேலியா கடற்பரப்பில் பாறைத்துகள்கள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.
|
Thursday, 24 March 2016
![]() |
திடீரென்று கடலுக்குள் தோன்றிய மண் |
Loading...
