கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலக இடமாற்றம் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரின் முழுப் பொறுப்பு என்பதை நாம் இங்கு அறிய வேண்டும் .இவ் விட மாற்றம் பற்றி ஏன் இன்னும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பபப் படவில்லை என்பதுதான் இங்கு கேள்விக் குறி .
கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் இவ் விடயத்தை பாராளுமன்றத்தில் இது வரை பேசவில்லை .இதை ஏன் இப் பிரதேச சமூகம் இவரிடம் கேட்கவில்லை.
பாராளுமன்றம் இருப்பது எதற்கு? இவர் ஏன் பாராளுமன்றம் போகுகின்றார் என்பது புரியாத புதிர்தான். இவ்வாறான விடயம்கள் அமைச்சர் ஒருவரின் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அல்லது பாராளுமன்ற சாப்பாட்டு விடுதிகளிலோ கதைக்க கூடிய விடயம்கள் அல்ல.
இவ் விடயம் பற்றி அதாவது வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலக இடமாற்றத்தின் சாதகம் மற்றும் அதன் பாதகம் என்பன கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் பாராளுமன்றத்தில் கார சாரமாக விவாதிக்க வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் வேண்டுகோள் ஒன்றை முன் வைக்கிறார் .
இது நடக்குமா என்பதுதான் கேள்விக் குறி

