ஜோநாதன் பவர்
ஜனாதிபதி பராக் ஒபாமா அவதானித்திருப்பது “ஐ.எஸ்.ஐ.எல் (இஸ்லாமிய நாடு) எங்கள் ஆக்கிரமிப்பினால் ஈராக்கிலிருந்த அல் ஹைதா பெற்ற வளர்ச்சியின் காரணமாக உருவான ஒரு நேரடி வளர்ச்சியாகும் -- அது திட்டமிடப்படாத விளைவுகளுக்கு ஒரு உதாரணம் -- இதன் காரணமாகத்தான் சுடுவதற்கு முன் பொதுவாக நாங்கள் சரியாக இலக்கு வைக்க வேண்டும்”.
எங்களில் பலரும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தினால் சதாம் ஹ_சைனின் ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஈராக் போரின் பயங்கரத்தைப் பார்த்திருக்கிறோம், அப்போது 200,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மொத்தம் 800 பில்லியன் அமெரிக்க டொலர் பிரச்சாரத்துக்காக செலவிடப்பட்டது, போரை நடத்துவதற்கு ஒரு சாக்கைச் சொல்வதற்காகவும் அதைக் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள வைப்பதற்காகவும் அங்கு ஒரு ‘மாக்கியவெல்லியானின்’சதி பயன்படுத்தப்பட்டது. இருந்தும் வாஷிங்டனில் அதிகார வட்டத்தில் இருந்த பலரும் நம்பியது அமெரிக்கா களத்தில் உடனடி துப்பாக்கிச்சூடு நடத்தவும் மற்றும் ஆபத்து வரக்கூடும் என்று தோன்றும் போதெல்லாம் கொலை செய்யவும் வேண்டும் என்று -- இது ஈராக், லிபியா, மற்றும் அதற்கு முன் வியட்னாம் போரின்போதும் உருவான நம்பிக்கை.
13 வருடங்களுக்கு முன்பு ஈராக் போருக்குச் செல்வதற்காக சொல்லப்பட்ட நியாயப்படுத்தலுக்கு அடிப்படையான 93 பக்கங்கள் அடங்கிய சி.ஐ.ஏயின் இரகசியமானதாக வகைப்படுத்தப்பட்ட ஆவணத்தில் சதாம் ஹ_சைனின் பேரழிவு திட்டங்களுக்கான ஆயுதங்கள் மற்றும் அல்ஹைதாவுடன் அவருக்குள்ள நெருக்கமான தொடர்புகள் பற்றி பிரத்தியேகமான தகவல்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. புலனாய்வு ஊடகவியலாளர் ஜோண் கிறீன்வலாட்டின் வேலைகளின் காரணமாக இந்த ஆவணம் இப்போது பகிரங்கமாக்கப் பட்டிருப்பதற்கு அவருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். அவரது கண்டுபிடிப்புகள் ஒன்-லைன் இதழான ‘வைஸ்’ என்பதில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. அந்த ஆவணத்தை பிரசுரிப்பதற்கு முன்பு அதில் பெரும் எண்ணிக்கையிலான பகுதிகள் நீக்கப்பட்டிருந்தன, இப்போது ஒவ்வொருவரும் அதை முழமையாகப் படிக்க கூடியதாக உள்ளது. போருக்கான நியாயப்படுத்தல் பூச்சியம் என்பதை அது வெளிப்படுத்துகிறது. சதாம் ஹ_சைனுக்கும் மற்றும் அல்ஹைதாவுக்கும் இடையில் எந்த வித செயற்பாட்டு உறவுகளும் இருக்கவில்லை என்பதையும் மற்றும் பேரழிவு திட்டங்களுக்கான எந்த ஆயுதமும் அங்கு இருக்கவில்லை என்பதையும் அந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது.
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ் இனது பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் றம்ஸ்பெல்ட், சதாம் ஹ_சைனுக்கு பயங்கரவாத குழுவுடன் இருந்த தொடர்புகளுக்கு குண்டுகளால் கூட அழிக்கமுடியாத ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவித்திருந்தார். ”அல் ஹைதா அங்கத்தவர்களின் பிரசன்னம் ஈராக்கில் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. உயர் மட்டத்திலான தொடர்புகள் ஒரு தசாப்த காலமாகவே இருந்து வருகிறது என நம்பகமான அறிக்கைகள் மூலம் கருதப்படுகிறது மற்றும் இரசாயன மற்றும் உயிரியல் முகவர்களின் பயிற்சிக்கும் சாத்தியம் உள்ளது” என அவர் கூறியிருந்தார்.
சி.ஐ.ஏயின் தேசிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கை ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டைக் காட்டுகிறது. அந்த அறிக்கை அவதானிப்பது அல் ஹைதா மற்றும் சதாம் ஹ_சைன் ஆகியோர் இடையிலான வேலை செய்யும் உறவுகள் பற்றிய அதன் தகவல் “மாறுபட்ட நம்பகத்தன்மையை” அடிப்படையாகக் கொண்டது என்று.
ஒட்டுமொத்த உறவுகள் பற்றிய தகவல்களைப் பொறுத்தமட்டில், “பாக்தாத் எந்த அளவுக்கு அதன் எல்லைகளை பாதுகாப்பான புகலிடமாகவும் பரிவர்த்தனை தளமாகவும் பயன்படுத்துவதற்கு தீவிரமான உடந்தையாக இருந்திருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியாது’. அமெரிக்காவிலுள்ள சில சிறந்த ஆய்வாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள உயர்வான இயங்கு சக்தி கொண்ட ரான்ட் கூட்டத்தாபனம் கடந்த டிசம்பரில் “கண்கட்டுகள்,பெருந்தவறுகள் மற்றும் யுத்தம்” என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லியிருப்பது சி.ஐ.ஏ அறிக்கை கொண்டிருந்த அநேக தகுதிகள் கைவிடப்பட்டன என்று. அதன் வரைவு, கட்டளை மற்றும் முடிவுகளை மேற்கொள்ளும் புலனாய்வு சங்கிலியிடம் சென்றபோது அதிலுள்ளவை அதிகளவு தீர்க்கமானவையாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஒரு உதாரணமாக சி.ஐ.ஏ அறிக்கை முடிவு செய்தது, “ஈராக் அநேகமாக ஒரு நோய்த்தடுப்பு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பதற்காக புதுப்பித்து வருகிறது, ஆனால் உயிரியல் ஆயுத ஆராய்ச்சி மீளவும் தொடங்கப்பட்டுள்ளதா என்பதை எங்களால் தீர்மானிக்க இயலவில்லை” என்று. அந்த அறிக்கை மேலும் தெரிவிப்பது ஹ_சைனிடம் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் போதியளவில் இல்லை என்று. ஆனால் ஒக்ரோபர் 7, 2002ல் சின்சினாற்றி, ஓகியோவில் நிகழ்த்திய ஒரு பேச்சில் ஜனாதிபதி புஷ் வெறுமே “ஈராக் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை வைத்திருப்பதுடன் அதை தயாரிக்கவும் செய்கிறது மற்றும் ஆதாரங்கள் அடையாளப்படுத்துவது ஈராக் அதன் அணு ஆயுதத் திட்டத்தை மீள் கட்டமைத்து வருகிறது என்பதை” என்று பேசினார்.
மற்றொரு உதாரணம் றம்ஸ்பெல்ட் சதாம் ஹ_சைனுக்கு அல் ஹைதாவுடன் உறவு உள்ளது என்பதற்கு தன்னிடம் குண்டுகள் கூட துளைக்க முடியாத ஆதாரம் உள்ளது என்று கூறியதைப் பற்றியது. “அல் ஹைதாவின் பிரசன்னம் ஈராக்கில் இருப்பதற்கு எங்களிடம் உறுதியான ஆதாரம் உள்ளது என்று அவர் சொன்னார். ஆனால் சி.ஐ.ஏயின் ஈராக் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையில் அல் ஹைதா மற்றும் ஈராக் இடையே இருப்பதாக சொல்லப்படும் வேலை செய்யும் உறவு பற்றி தெளிவாக முடிவு செய்யப்படவில்லை, உண்மையில் அப்படி ஒன்று இருந்தால் சதாம் ஹ_சைனுக்கு அந்த உறவு பற்றி தெரியுமா என்பது கூடச் சொல்லப்படவில்லை,. காங்கிரசின் பின்னைய புலனாய்வுகள்; தெளிவு படுத்தியிருப்பது புலானாய்வு சமூகம் அதன் கோரிக்கையை ஒரு ஒற்றை ஆதாரத்தின் அடிப்படையில் தீர்மானித்திருப்பதாக.
போல் பில்லர், ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இப்போது ஒரு வருகைப் பேராசிரியராக உள்ளார் மற்றும் அதற்கு முன்னர் ஈராக்கிலுள்ள ஒன்றிணைந்த புலனாய்வு சமூகத்தின் மதிப்பீடுகளுக்கு பொறுப்பாக இருந்தவர், “வைஸ்”க்கு தெரிவித்திருப்பது, உயிரியல் ஆயுதங்கள் பற்றிய கோரிக்கை ஈராக்கின் முன்னாள் எதிர்கட்சி குழுவான ஈராக் தேசிய காங்கிரசின் தலைவரான அகமட் சாலபி போன்றவர்களின் நம்பிக்கையற்ற ஆதாரங்களின் அடிப்படையில் எழுப்பப் பட்டவை என்று. “சில ஆதாரப் பொருட்கள் பற்றிய சந்தேகம் போதுமானதாக இருக்கவில்லை” என்று பில்லர் சொன்னார். “ பிரதான தீர்ப்புகளில் அவநம்பிக்கை வெளிப்படுத்தப் பட்டுள்ளதாக நான் எண்ணுகிறேன்”. அவர் தொடர்ந்து சொல்லியது, புஷ். மற்றும் றம்ஸ்பெல்ட் ஆகியோர் ஈராக்குடன் போருக்குச் செல்வது என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள், அதனால் சி.ஐ.ஏ யின் அறிக்கை அவர்களிடம் செல்வாக்கு செலுத்தவில்லை. ஆனால் அவர்கள் தங்களது தவறாக வழிநடத்தும் விளக்கங்களை யுத்தம் அவசியமானது என்ற பொதுவான எண்ணத்தை மக்கள் மனதில் விதைப்பதற்கு பயன்படுத்தினார்கள். (அந்தச் சமயத்தில் பிரித்தானிய தூதுவராக இருந்தவர் தான் எழுதிய நூலில் இது பற்றி தான் பிரித்தானிய பிரதமரிடம் அறிவித்ததாவும், இருந்தும் பிளேயர், தவறான செயற்பாடுகள் பற்றிய ஆதாரங்கள் மேலும் மேலும் சேகரிக்கப்பட்டு வருவதாக பொதுமக்களிடம் சொல்லி வந்தார் எனச் சொல்லியுள்ளார்.)
றான்ட் இனது ஆய்வு மேலும் முடிவு செய்திருப்பது, நகரும் உயிரியல் ஆய்வு கூடங்களின் அறிக்கையில் யுரேனிய தாது நைஜரிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது மற்றும் ஈராக் பேரழிவு ஆயுத முறைகளை விநியோகிப்பதற்காக ராக்கெட்டுகளை அமைத்து வருகிறது என்று சொல்லியிருப்பதும் தவறானது என்று.
ஆம் சுடுவதற்கு முன் சரியாக இலக்கு வையுங்கள் மற்றும் இப்படிப்பட்ட கொடூரமான பொய்களைச் சொல்லாதீர்கள்.
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்