சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் கூறியதாவது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி அரசியல் சார்ந்த பதவியாக இருக்கக் கூடாது.அது நிர்வாகம் சம்பந்தப்பட்ட பதவியாக இருக்க வேண்டும்.முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு கட்சி வேண்டும் என்ற நிலைமை மாறி இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சி வேண்டும்; இக் கருத்து நகைப்புக்கு இடமானது . முஸ்லிம்களை விற்று தனக்கு மட்டுமே அமைச்சுப் பதவி எக் கட்சி ஆட்சிக்கு வரினும் பெற்றுக் கொள்ளும் சுய நல ,பதவி மோக பேராசை தான் இது.
ஐக்கியதேசியக் கட்சியின் அங்கத்தவராகவும் அக் கட்சியில் வேட்பாளராக போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான இவர் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி என்கிறார். இது எப்படி சாத்தியம்,முஸ்லிம்கள் என்ன இன்னும் காதில் பூ சுற்றிக் கொண்டா இருக்கிறார்கள்.இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி என்று குட்டையைக் குழப்புகிறார் .
கடந்த காலம்களில் செயலாளருக்கு பிரதி அமைச்சுப் பதவி கொடுத்தவர் இப்போது செயலாளர் பதவி அரசியல் சார்ந்த பதவியாக இருக்கக் கூடாது என முன்னுக்குப் பின் முரணாக கதைக்கிறார் அதாவது இவர் ஒரு சந்தர்ப்பவாதியாகவே கருதவேண்டி உள்ளது
மேலும் அவரது கருத்து கடந்த ஆட்சியில் எந்தவோர் அபிவிருத்தியும் செய்ய முடியாமல் நாம் தவித்தோம் என்கிறார் ஆனால் அவர் அமைச்சராக இருந்தவர் என்பது மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறார் போலும்
கட்சித் தலைவன் சுயநலவாதி ,திறன் அற்றவர்,சந்தர்ப்பவாதி என்ற காரணத்தினால் திறன் உள்ளவர்கள் தனக்கு ஒரு கட்சி அமைக்கிறார்கள் என்பது எதிர்வரும் தேர்தலில் இவர் உணர்வார் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்