Tuesday, 19 April 2016

புரையோடிப் போயில்ல மத சார்பான மக்களை மூளைச் சலவை செய்வது மிகக் கடினமே NDPHR

தேசிய ஜனநாயக மனித உரிமைகள்  கட்சி இனவாதம் ,பிரதேசவாதம் அற்ற சகல இன ,பிரதேச மக்களையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாகும் சேவை ,தொழில் வாய்ப்பு ,அபிவிருத்தி என்பன இனம்,  மொழி, பிரதேசம் என பாகு பாடு பாராது சகலருக்கும் திறமை மற்றும் தேவை என்பவற்றுக்கு சம உரிமை வழங்கும் கொள்கையைக் கொண்டது எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள்  கட்சி.

ஒன்றுக்குள் ஒன்றாக பிரதேச ரீதியில் இணைந்துவாழும் பல சமூகம்கள் பிரிவினை கோருவது அல்லது மதம் மொழி சார்ந்த ரீதியில் பாகுபாடு காட்டி இனம்களைப் பிரித்து அரசியல் செய்வது அல்லது உரிமைகள் கோருவது மிகவும் கேவலமான அரசியல் கொள்கையாகும் 

மதக் கொள்கைகளோடு மக்களைப் பிரிக்க வித்திட்ட கட்சிகளை நாம் வன்மையாகக்  கண்டிப்போதோடு இக் கட்சிகள் இத்தோடு சகல இன மக்களையும் இலங்கையர்கள் என்ற ரீதியில் அரவணைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் .

சில முட்டாள்கள் சில சந்தர்ப்பம்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதன் மூலம் மகா புருசர்கள் எனப் பெயர் பெறலாம் ஆனால் அதன், விளைவுகள் மற்றும் அதன்  பின் விளைவுகள் எதிர் காலச் சந்ததியைப் பாதிக்கும் என்பதை தூர நோக்குடன் பார்க்கத் தவறி விட்டார்கள் அதன் விளைவுகள் நாம் இப்போது கண் கூடாக காண்கிறோம் அனுபவிக்கிறோம் 

தற்போது புரையோடிப் போயில்ல மத சார்பான மக்களை மூளைச் சலவை செய்யவது மிகக் கடினமே 

எல்லோரும் இந்த நாட்டு சம உரிமைப் பிரசைகள் என்ற நோக்கில் உருவானதே எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள்  கட்சி. எம்மால் முடிந்ததை சாதிப்போம் அது மக்கள் கையில்தான் உள்ளது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள்  கட்சி இஸ்தாபகர்  மொஹிடீன் பாவா கூறினார் 












Loading...