Saturday, 9 April 2016

முடங்கிக் கிடக்கும் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் -NDPHR



வடமாகாண முதல் அமைச்சர் சர்வதேச ரீதியில் வடக்கும்  கிழக்கும் இணைக்கப் பட வேண்டும் என்று பல அறிக்கைகள் விடுகிறார் அது மட்டுமல்லாது அரசியல் அமைப்பு திருத்த  யாப்பில்  வட கிழக்காகவும் அமைந்து இருக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிக்கைள் விடுகிறார் ஆனால் கிழக்கு மாகாண முதல் அமைச்சரோ முடங்கிக் கிடக்கிறார். இதன் உள்நோக்கு பற்றி மக்கள் உணரவேண்டும் .வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும்.கிழக்கை வடக்குடன் இணைக்கக் கூடாது என்று இதுவரை இம் முதல் அமைச்சரால் ஏன் அறிக்கை ஒன்றை ஆனித் தரமாக விடவில்லை என்று தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கேள்வி ஒன்றை கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் முன் முன்வைக்கிறார்  

மேலும் அவர் கூறுகையில் இந்தப் போலி அரசியல் வாதிகளை புரட்டிப் போட்டு தோலுரிப்பதே நமது புரட்சியாளர்களின் வேலையாக இருக்கவேண்டும் பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும் ஆனால் இவர் இவ் இவ்விடயத்தில்முடங்கிக் கிடப்பது பற்றி  கிழக்குச் சமூகம் மிக ஆழமாக சிந்திக்க  வேண்டும். 

இதற்குக் காரணம் என்ன? பண பலம் உடையோர், பல தடவை கட்சி விட்டு கட்சி மாறும் கொள்கை ஒன்றில்லா அரசியல் வாதிகள் ,பதவிக்காக அலைந்து திரியும் அரசியல் வாதிகள் , இவ்வாறனவர்களைத்தான்  நம் சிறு பான்மைச் சமூகம் அரசியலுக்கு வரவேட்கின்றது.  இதன் பலன் இச் சமூகம் அவர்களது உரிமைகளை படிப் படியாக  இழக்கின்றது.

சிறு பான்மைச் சமூகம் தங்களது கட்சிகளைத் திட்டி திட்டியே  சமூத்தின் அரைவாசி உரிமைகள்  அழிந்து விட்டது

எனவே சந்தர்ப்பத்தைத் தவற விடாது கிழக்கு மாகாண முதல் அமைச்சர்   வடக்கும் கிழக்கும் இணைப்பை எதிர்த்து மக்கள் சார்பாக பகிரங்க அறிக்கை ஒன்றை உடனடியாக  விடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 

இவர் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்ச்சிதான் என்ன? இதில் எத்தனை சகுனிகள் பிண்ணனியில் உள்ளனர்  என கிழக்குச் சமூகம் ஆராய முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார் 















Loading...
  • Golden Key Case: Government will repay up to 41 %, says AG18.06.2015 - Comments Disabled
  • முஸ்லிம் வேட்பாளர் களில்  அதாவுல்லா மட்டுமே வெற்றி பெறும் சாத்தியக் கூறுகள் காணப் படுகின்றன ,05.08.2015 - Comments Disabled
  • யாழ். ஊடகங்கள் மீது சுவாமிநாதன் பாய்ச்சல்!05.03.2016 - Comments Disabled
  • கிழக்கு மாகாண மக்களுக்கான அன்பான அறிவித்தல்:03.05.2015 - Comments Disabled
  • பெண்களுக்கு ஆயிரம் கவலைகள்13.05.2015 - Comments Disabled