Sunday, 1 May 2016

இலங்கை ஜனாதிபதியின் மே தின வாழ்த்து


உழைக்கும் தோழர்களின் வியர்வைக் கண்ணீரைப் போற்றும் நாளே மே தினமாகும் வியர்வைக் கண்ணீரைப் போற்றிப் புகழும் நோக்கிலேயே உலகில் மே தினம் கொண்டாட்டப்படுகின்றது. உலக உழைக்கும் தோழர்கள் கையில் எடுத்துக் கொண்ட சிகப்பு கொடியின் ஊடாக உழைப்பாளர்களின் ஒற்றுமையும், வெற்றியுமே பதிவாகியுள்ளது.

உழைக்கும் மக்களின் கண்ணீர் வியர்வை உதிரம் ஆகியவற்றின் அர்ப்பணிப்பு இந்த நாளில் நினைவு கூறப்படுகின்றது. உலகின் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு அடியிலும் ஏதேனும் ஒர் வகையில் உழைப்பாளர்களின் பங்களிப்பு அதில் உள்ளடங்கியுள்ளது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டுக்கு ஜனநாயக வெற்றி கிடைக்கப் பெற்றது. புதிய பொருளாதாரம் அரசியல் என்ற வழிகளில் உழைப்பாளர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது.

உழைக்கும் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படும் வெற்றிகரமான தினமாக இந்த மே தினம் அமையும் என வாழ்த்துகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Loading...