Tuesday, 24 May 2016

இலங்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவி

 

இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஒரு லட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளதாக ஸ்டெய்ர்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுக்காக ஒன்றரை லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கமும் அறிவித்துள்ளது. குறித்த நிதி உதவிகள் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்கு நிதி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...