சாய்ந்தமருது நகரசபையோ
அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும் இல்லை .
தற்போது மாநகர சபை என்ற
பெரும் அந்தஸ்த்தில் அடங்கி உள்ள
சாய்ந்தமருது தனியாகப் பிரிக்கப் படுமானால் அதன் விளைவாக எதிர் கால பின் விளைவுகள் என்ன என்பது
பற்றிய எதிர்கால தூர நோக்குள்ள
ஆரோக்கியமான சிந்தனை அல்ல என்றே கூற வேண்டும்
நான் இங்கு கூறிக் கொள்வது மனிதர்களின் சிந்தனை-மனம்-சுற்றம் எனும் கூறுகளை அடிப்படையாகக்
கொண்டு அமைவது. எல்லா மனிதர்களுக்குமே உணர்ச்சி என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது.
அப்படி இருக்க ஓர் எதிர்வினைக்கு அல்லது வெளிப்பாட்டுக்கு சிந்தனை முக்கியமா
அல்லது உணர்ச்சி முக்கியமா என ஓர் உடனடி தீர்வு காண முடியுமா?" என்பதே
தற்போது மாநகர சபை
அந்தஸ்தில் உள்ள சாய்ந்தமருத்துக்கு என்ன வகையான பிரச்சினைகள் என முதலில் அலசப் படவேண்டும் ,அலசப் பட்டு அவைகளை
தீர்ப்பதுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே அன்றி குறு கிய சிந்தனையோடு பிரித்தெடுப்பது புத்திசாலித் தனமன்று. தமிழர்கள் ,முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வழி தேட வேண்டுமே அன்றி பிரித்தாழ
வேண்டும் என்ற கோஷம் அடியோடு அகற்றப் படவேண்டும்
சாய்ந்தமருதை
பிரித்தெடுப்பதன் மூலம் கல்முனைக்குடி,மருதமுனை போன்ற முஸ்லிம்கள்
வாழும் பிரதேசம் வலு இழந்து அனாதைகளாகப்படும் அத்துடன் கல்முனை என்று புகழ் பெற்ற
நகரம் முஸ்லிம்களின் கையை விட்டும் சோரம் போகும்.
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச
சபை வழங்கப்பட வேண்டு மென்பதில் உங்களை விட கல்முனைத் தமிழர்கள் வேகமாக இருக்கிறார்கள்,
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்பட்டால் அதனை காரணங்காட்டி கடற்கரைப் பள்ளி
றோட்டுக்கு மேலுள்ள கல்முனை நகரம் உள்ளிட்ட
பிரதேசங்கனை உள்ளடக்கி அவர்களுக்கு தனியான பிரதேச சபை, பிரதேச செயலகம் மட்டுமல்ல கல்முனை
எனும் பெயரும் கூட அவர்களுக்கு மட்டும்தான சொந்தம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
சாய்ந்தமருதும் பிரிக்கப்பட்டால்
கல்முனை முஸ்லிம்களின் முழுப் பொருளாதாரமும் உள்ளடங்கிய கல்முனை செயலகம் மற்றும் பிரதேச
சபையை அவர்களின் கைகளுக்குள் கொண்டு வந்து விடலாம் என தமிழர்கள் நம்புகிறார்கள்
ஆகவே பேசித் தீர்மானிக்க வேண்டிய
விடயத்தை பேசாமல் தீர்மானிப்பது தவறு, அது குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்பதை
நாம் உணர வேண்டும்.
எனவே பிரச்சினைக்கு தீர்வு
காண சாய்ந்த மருதைப் பிரிப்பதல்ல விடை , அதை எப்படி தீர்த்து வைக்க முடியும் என்று சிந்தித்து முடிவு எடுக்க
வேண்டும் என்பதே எனது கருத்து என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா தனது
கருத்தை வெளியிட்டார்

