Monday, 23 May 2016

கிழக்கு மாகாணத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் கொலன்னாவை பிரதேச அரசியலில் மூக்கை நுழைக்க வேண்டாம் NDPHR

வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு சகல விதமான உதவிகளும் இன், மத ,பிரதேச அரசியல் பிரிவனை யற்ற முறையில் அறிமுகப் படுத்தியோ அல்லது அறிமுகம் அல்லாமலோ அளிக்கப் பட வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்.

இங்கு மிகவும் வருந்தப் படவேண்டிய விடயம் என்னவெனில் கிழக்கு மாகாண சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் கஷ்டத்தில் குளிர் காய்ந்து அரசியல் லாபம் தேட முயல்வது . 

கடந்த சில தினம்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கொலன்னாவைக்கு வெள்ள அழிவுப் புதினம் பார்க்கப் போய் அப் பிரதேசவாதிகளால் கூக்குரல் காட்டி துரத்தி அடிக்கப் பட்டமை நல்லதோர் பாடம் .

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் என்றால் இவ்வாறன நெருக்கடியிலும் மாலை போட்டு வரவேற்று இருப்பார்கள் .

உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் ஆனால் அப் பிரதேச அரசியலில் அதாவது கொலன்னாவை பிரதேச அரசியலில் மூக்கை நுழைப்பதை இக் கிழக்கு மாகாணத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.என்பதே எனது அறிவுரையாகும்




Loading...