ஒற்றுமை எனும் கையிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டால் நிச்சயம் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்ற இஸ்லாமியக் கோட்பாட்டை மதியாமல் தங்களில் யார் பெரியவர்? என்ற ஆதிக்கச் சூழ்ச்சியில் பழியாகி இலங்கை முஸ்லிம்கள் பிரித்தாளப் படுகின்றனர்.இலங்கை முஸ்லிம்களை அல்லாஹ்தான் காப்பாற்றனும்!
இலங்கை அரசியலில் முஸ்லிம்களை அனுசரித்துப் போவது எல்லாக் கட்சிகளுக்குமே நல்லது என்பதை முஸ்லிம்களை விட அனைத்து கட்சிகளும் உணர்ந்துள்ளன. தமிழர்களை ஒருங்கிணைத்தாலும் மத கலாச்சார ரீதியாக பிளவு பட வாய்ப்புண்டு. ஆனால் முஸ்லிம்களை கவர்ந்து விட்டால் சிந்தாமல் சிதறாமல் வாக்கு வங்கியை அப்படியே அமுக்கி விடலாம்! என்பதுதான் பிரதான காரணம்.
கடந்த முப்பது வருடங்களாக இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் மீண்டும் பேரின வாதக் கட்சிகளின் கொடியை ஒரு கையிலும் தங்கள் அமைப்பின் கொடியை இன்னொரு கையிலும் பிடித்து கோஷம் போட்டு ஓட்டு கேட்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களது அரசியல் கட்சி ஆதரவு ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் எதிரெதிர் நிலை கொண்ட அறிக்கைப் போர்களால் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களது அரசியல் கட்சி ஆதரவு ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் எதிரெதிர் நிலை கொண்ட அறிக்கைப் போர்களால் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் காலத்தில் இலங்கை முஸ்லிம்களை அல்லாஹ்தான் காப்பாற்றனும்! என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்

