முஸ்லிம் அமைச்சர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவிகளின் மூலம் கூடியளவு பலவகைகளிலும் நன்மைகளை முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் ஏனேனில் மீண்டும் ஒரு முறை இவ்வாறான ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதுக்கு உத்தரவாதம் இல்லை என தேசிய ஜன நாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் தற்போது வழங்கப்பட்டுள்ள வர்த்தக அமைச்சு மிகவும் விசாலமானது அதன் மூலம் பல் வேறுபட்ட மூலதன தொழில் அபி விருத்திகளை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். அதை விட்டு விட்டு ,முட்டாள் தனமாக கட்சி பேதம் ,காழ்ப்புணர்ச்சி போன்றவைகளால் நாம் அடையும் பயன் ஒன்றுமே இல்லை .இழப்பு சமூகத்துக்கே. எனவே மறு தேர்தல் வரும் வரை கையில் உள்ளதை கூடிய அளவு பயன்படுத்திக் கொள்ளுபடி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் திணைக்களம்களில் அமர்த்தப் பட்டுள்ள தலைவர்கள் ,இயக்குனர்கள் தன்னால் முடியுமான அளவு கிழக்கு பிரதேசத்துக்கு அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள திணைக்களம்களின் சேவைகளையும் விஸ்தரிக்க முயற்சிக்க ஆவண செய்ய வேண்டுமே அல்லாது போவதும் வருவதுமாக இருக்கக் கூடாது
அதே போல் மாகாண அமைச்சர்களும், உதவி அமைச்சர்களும் செயல்பட வேண்டும்
இவற்றுக்காக அமைச்சர்கள் அனுபவம் பெற்ற கல்விமான்களை கொண்ட ஒரு செயல் குழுவை அமைப்பது நன்று எனவும் ஆலோசனை கூறினார்

