கிழக்கில் முஸ்லிம் சமூகத்தை பிரித்தாள புதிதாக சில காளான் குழுக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிரான சிலரின் சுய நலவாத கோஷத்தைப் பயன் படுத்தி அரசியல் அதிகாரம் பெற பிணம் தின்னும் கழுகுகளாக வட்டமிடுகின்றன,இஸ்லாமிய வரலாறுகளை உவமை காட்டி உங்களை உசுப்பேற்றி பிளவுபட்டுள்ள சமூகத்தை மேலும் பிளவு படுத்த எடுக்கப் படும் நடவடிக்கைகளை மக்கள் இனம் கண்டு முறி அடிக்க வேண்டும்
கிழக்கு முஸ்லிம் சமூகத்தை சின்னா பின்னப்படுத்த முயலும் காளான் குழுக்கள் தட் கால அரசியலில் செல்லாக் காசாகிப் போன இவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா முஸ்லிம் சமூகத்தை கேட்டுக் கொண்டார் . அத்துடன் தற்போது நல்லதோர் அமைச்சுப் பதவியில் உள்ள அமைச்சர் ரிஷாட் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் உங்களது பிரதேச அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ள முடியும் என தான் நம்புவதாகவும் கூறினார் .