அரசியலில் முஸ்லீம் பெண்களின் பங்களிப்பு பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகத் தலைவர் மொஹிடீன் பாவா விடம் வினவியபோது அவர் கூறியதாவது முஸ்லீம் பெண்கள் அரசியலில் மேடை ஏற வேண்டும் அல்லது தேர்தலில் குதிக்க வேண்டும் என்பதல்ல , முஸ்லீம் பெண்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட கட்டுப் பாடுகள் உண்டு ,அதை மீறாமல் வரையறைக்குள் அவர்கள் அரசியல் அறிவை வளர்க்க வேண்டும் ,என்பதே என் கோட்பாடு . கணவன் சொல்லுகிறான் அல்லது மகன் சொல்லுகிறான் அல்லது சகோதரன் சொல்லுகிறான் என்பதற்காக வாக்கு அளிக்காமல் தங்களது சுய புத்தியைப் பாவித்து வாக்கு அளிக்கும் தீர்மானத்தினை எடுக்க வேண்டும் . அதனால்தான் நான் கூறினேன் முஸ்லீம் பெண்களுக்கும் தனிப்பட்ட தாங்களே அரசியலில் தீர்மானிக்கும் அரசியல் அறிவு வேண்டும் என்று. இதட்கான முன்னோடியான நிகழ்வுகளை வரும் காலம்களில் எமது கட்சி அறிமுகப் படுத்தும் .எமது கட்சியில் பல பெண்கள் இணைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிட தக்கது என்றார்
