ஜெஸீம் ஆஸாத் சட்டத்தரணியாக
சத்தியப்பிரமாணம்
செய்கு முகம்மது சலாஹுத்தீன் செய்கு அகமது ஜெஸீம் ஆஸாத் இலங்கை உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் மற்றும் ஏனைய நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த (27.01.2017) வெள்ளிக்கிழமை சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.ஏ.எஸ்.எம். சலாஹுத்தீன், எம்.ஐ. மைமுனாவினதும் ஏக புதல்வனாவார். நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் கல்விகற்ற இவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டதாரியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
(தகவல் - எம்.எஸ்.எம்.ஸாகிர்)
