சேருநுவர ரஜமகாவிகாராதிபதி முங்கேன மெத்தாராம விகாராதிபதி இன்று முதலமைச்சர் காரியாலத்துக்கு விஜயம் மேற்கொண்டு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களைச் சந்தித்து சேரு நுவர பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் மகஜர் ஒன்றினைக் கையளித்து கலந்துரையாடினார்.
அங்கு குறிப்பிட்ட விகாராதிபதி கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பற்றி நான் அதிகமாக நல்லவைகளையே அறிந்திருக்கிறேன் இந்த முறையையே நான் விரும்புகிறேன் முதலமைச்சர் மூவின மக்களையும் அனுசரித்து ஒன்றிணைந்து செல்வதைப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.